Your browser version is outdated. We recommend that you update your browser to the latest version.

 

Herbal Garden

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------1.   துளசி  - Thulasi

துளசி மூலிகை செடியாகும். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. ஏறத்தாழ 50 சென்ரிமீட்டர் வரை வளரக் கூடிய இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. இது கோயிற் பூசைகளில் குறிப்பாக பெருமாள் கோயில்களில் பயன்படுத்தப்படுவதால் கோயிற் பூந்தோட்டங்களில் வழக்கமாகக் காணப்படுகிறது. வீடுகளில் துளசியை வளர்த்து பூசிக்கும் வழக்கமும் உண்டு.

துளசியின் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான்.அவரவர் வசதிக்கேற்ப சிறிய தொட்டியில் கூட துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால் அதனை கவனமாக பராமரிப்பது அவசியம். எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம்.

  • துளசிச் செடியை தினமும் உட்கொண்டால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் தீரும்.
  • ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம்.
  • உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி வராது தடுக்கலாம்.
  • உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும்.
  • தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும்.
  • சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான ரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.

                  ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 2.   கற்பூரவள்ளி  - Karpoora Valli

கற்பூரவள்ளி அறிவியல் பெயர் Plectranthus amboinicus மற்றும் அது Coleus amboinicus என அடையாளம் காணப்பட்டுள்ளார் முறை. கற்பூரவள்ளி ஆங்கிலத்திலும் இந்திய Borage என அறியப்படுகிறது.

இலைகள் அது மூல மெல்லும்போது போது சாறு இருந்து ஒரு கட்டுப்படுத்துகிற சுவை மென்மையாக மற்றும் மென்மையான உள்ளன. அது ஒரு மூலிகை என்றாலும் துரதிர்ஷ்டவசமாக, நான் எந்த மூலிகைகள் பட்டியலில் இந்த ஆலை பார்க்க வேண்டாம். கற்பூரவள்ளி சமைத்த மற்றும் மூல சாப்பிடவில்லை.

ஒரு குழந்தை அல்லது குழந்தை எந்த தென்னிந்திய வீட்டு நிச்சயமாக, இது, பாரம்பரிய மருத்துவம் போன்ற பிரபலமானது கற்பூரவள்ளி முழுவதும் வரும். நான் தனிப்பட்ட முறையில் அவர் செஸ்டி இருமல் மற்றும் காய்ச்சல் அபிவிருத்தி போது என் 2 வயது மகன் அதை பயன்படுத்த வேண்டும்

குளிர் மற்றும் இருமல் போக்க உதவுகிறது.

- பெரியவர்கள் உள்ள நாசி நெரிசல் மற்றும் புண் தொண்டையின் குறைக்க பயன்படுகிறது.

- கற்பூரவள்ளி கட்டுக்கதையாகும் ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.

- வயிறு பாழாகி என்றால் செரிமானம் உதவுகிறது.

- சமையல் மற்றும் சாப்பாட்டின் வாசனைக்கு பயன்படுத்திய.

- கற்பூரவள்ளி கூட விட்டு வெப்ப மண்டல நாடுகளில் Aedes கொசுக்கள் நடப்படுகிறது.

 

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

 3.    செம்பருத்தி  - Chembaruthi 

செம்பருத்தி இலைகள், மலர்கள் இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. செம்பருத்தி உடல் வெப்பத்தைக் கட்டுப் படுத்தும். செம்பருத்தி மலமிளக்கும்; வறட்சி அகற்றும்; உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும்;காமம் பெருகும்; மாதவிடாயைத் தூண்டும் 

செம்பருத்தி முடி வளர்ச்சி, நரைமுடிப் பிரச்சனைகளைக் குணமாக்கும். பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகளில் செம்பருத்தி முக்கிய இடம் வகிக்கின்றது. செம்பருத்தி புதர்ச்செடி வகையைச் சேர்ந்த தாவரம் ஆகும். செம்பருத்தி இலைகள் கூர்மையான நுனி, விளிம்புகள் பற்களுடன் கூடிய அடர்த்தியான பச்சை நிறமானவை 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 

 

4.   அறுகு - Arugampul

அறுகு என்றும் மூதண்டம் என்றும் அழைக்கப்படும். இதற்க்கு பல பெயர்கள் உண்டு. இதனால் பாடாணவீறு, வாதம்-பித்தம்-கபம் ஆகிய முக்குற்றம், விஷக்கடி, மருந்துகளின் வெப்பம், தலைநோய், தூக்கமின்மை, குருதியழல், கண்ணோய், சொறி, நுண்புழு, மேகம், மேகவெட்டை, வெள்ளைபோக்கு, படர்தாமரை, குறிஎரிவு, நீரடைப்பு முதலிவற்றை நீக்கி உடல் அழகை கூட்டும்.                              

இந்த புல் சாறு கண் நோய்கள் கண்கள் மீது செலுத்தப்படும்.

மூக்கிலிருந்து இரத்தம் வடிதல், இந்த புல் சாறு நாசி சொட்டு பயன்படுத்தலாம்.

samoolam சாறு இரத்தம் முனைகின்றன பகட்டு மீது வெளிப்புறமாக பயன்படுத்தப்படுகிறது. எனவே விண்ணப்பித்த போது இரத்தப்போக்கு நிறுத்தப்படும்.

manjal அல்லது மஞ்சள் சேர்த்து புல் தரையில் மற்றும் சொறி சிரங்கு போன்ற தோல் நோய்கள், பூஞ்சை தொற்று போன்றவை மேல் பயன்படுத்தப்படும்

குவியல் இரத்தப்போக்கு இந்த புல் தரையில் மற்றும் பால் வேகவைத்த மற்றும் நுகரப்படுகிறது.

நுகரப்படும் என்றால் samoolam சாறு தொடர்ந்து நரம்பு மண்டலத்தின் வலிமை வழங்குகிறது. இந்த மருத்துவம் கூட unmatham (அதியியக்கச் சீர்குலைவு), Fitz போன்ற மனநல நோய்கள் நல்லது.இந்த புல் ஒன்று fistfull இருந்து தயார் காபி, vettilai அல்லது வெற்றிலை மற்றும் 1/4 பாகங்கள் மிளகு அரை பாகங்கள் ஒரு சிறந்த இரத்தத்தை சுத்தப்படுத்தும் உள்ளது

 

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

 5.   நெல்லிக்காய்  - Neelikai

நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது காய வைத்து பதப்டுத்திய 150 கிராம் நெல்லிக்காயில் 2428 மில்லி கிராம் முதல் 3470 மில்லி கிராம் வைட்டமின் சி உள்ளது. நெல்லிக்காயை நறுக்கி நிழலில் உலர்த்தி பொடியாக்கினாலும் 780 முதல் 2600 மில்லி கிராம் வரை வைட்டமின் சி இருக்குமாம்.

நெல்லிக்காய் மலத்தை இளக்குவதற்கும் , சிறுநீரை பிரிக்கவும் உதவுகிறது. ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் சாறை தேனுடன் கலந்து சாப்பிட்டால் பல நோய்களை எதிர்க்கும் வல்லமை உடலுக்கு கிடைக்கும். இதனை தினமும் காலை வேளையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் விரைவில் வலுவடையும் நெல்லிக்காய் பசுமையுடன் கிடைக்காத பட்சத்தில் காய்ந்த நெல்லிக்காய் பொடியை தேனுடன் கலந்து சாப்பிடலாம். 

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

 6.   கற்றாழை - Katralai

மருத்துவக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச் சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள், ரெசின்கள், பாலிசக்கரைடு மற்றும் ஆலோக்டின்பி எனும் பல வேதிப் பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருநது வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் மூசாம்பரம் எனப்படுகிறது.


தளிர்பச்சை, இளம்பச்சை, கரும்பச்சை எனப் பல விதமாக உள்ள சோற்றுக் கற்றாழை  முதிர்ந்தவற்றில் தான் மருத்துவத் தன்மை மிகுந்து காணப்படுகின்றன.

பொதுவாக் 40 வயதைக் கடந்து விட்டாலே மூட்டுவலி, கை, கால் வலி ஏற்படுவது பெரிதும் வாடிக்கையாகி விட்டது. அதிலும் வயது முதிர்ந்தவர்களுக்கு கால் மூட்டில் இருக்கும் திரவம் குறைவதால், நடப்பதே மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தக் கூடியதாகி விட்டது.
மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற “அலோசன் ஹெல்த் டிரிங்க் உதவும். இது உலகின் அபூர்வ சாகாவரம் பெற்ற சோற்றுக் கற்றாழை மூலிகையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துகள் நிறைந்த தண்ணீர் உடலில் குறைவாக உள்ள நீர்ச்சத்தை அதிகப்படுத்தி மூட்டுகள் சரியாக இயங்குவதற்குத்தேவையான கூழ் போன்ற திரவத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது.

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 

7.கறிவேப்பிலை - Karuvepplai

கறிவேப்பிலைக் கொத்தாக பயன்படுத்திக்கொண்டான் " என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.

இந்திய உணவுகளில் வாசனைக்காக அதிகம் பயன்படுத்தப்படும் கறிவேப்பிலை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இது மனித உடலில் சீரண மண்டலத்தை தூண்டும் வேதிப்பொருளாக செயல்படுகிறது.

இதனால் உணவானது உடலில் நன்கு செரிமானமாகி சத்துக்கள் கிரகித்துக் கொள்ளப்படுகின்றன. மருந்துப் பொருளாகப் பயன்படும் கரிவேப்பிலையை பற்றி சில தகவல்கள்:

கரிவேப்பிலையின் இலைகள், மற்றும் வேர்ப்பட்டை, கனிகள் போன்றவை பயன் உடையவை. இலையின் வடிநீர் வயிற்றுப்போக்கு, வாந்தி, சீதபேதிக்கு எதிராகச் செயல்படும் தன்மை கொண்டது. கசக்கிய இலைகளை தோல் வீக்கங்களுக்கு பற்றுப்போட பயன்படுத்தலாம்.

வேர்ப்பட்டை சிறுநீரகங்களின் வலி போக்கும் தன்மையுடையது. கனிச்சாறு எலுமிச்சை சாறுடன் கலந்து பூச்சிக் கடிகளை குணப்படுத்த மேல் பூச்சாகிறது.

           ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 

 

8.ஆவாரம்பூ- Avaramboo

ஆவிரை என்பது இக்காலத்தில் ஆவாரம்பூ என வழங்கப்படுகிறது. தைப்பொங்கல் கொண்டாட்டத்தின்போது காப்புக் கட்டுவதற்கும், மாட்டுப்பொங்கலன்று மாடுகளுக்கு மாலை கட்டுவதற்கும், வீடுகளுக்குத் தோரணம் கட்டுவதற்கும் ஆவாரம்பூவை இக்காலத்திலும் பயன்படுத்துகின்றனர்.

மேக நோய்கள், நீர்கடுப்பு, உள்ளங்கால் எரிச்சல், சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கான மருத்துவத்திற்கு பயன்படுகிறது. ஆவாரை இலையை பாசிப்பருப்பு, பூலாங்கிழங்கு ஆகியவற்றுடன் சேர்த்து அரைத்து உடலிற் பூசிக் குளித்துவர உடல் அரிப்பு,  உடல் வெப்பம் ஆகியவை குறையும். ”ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் காண்பதுண்டோ ?” என்பது சித்த மருத்துவப் பழமொழி.

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 

9.கீழாநெல்லி   - Keelanelli

கீழாநெல்லி (Phyllanthus niruri) ஒரு மருத்துவ குணமுடைய செடியாகும்.[2] இது ஏறத்தாழ அரை மீட்டர் வளரும் ஓராண்டுத் தாவரமாகும். 

இது குற்றுச் செடியினத்தை சேர்ந்தது ஆகும். இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. சுமார் ஒரு அடி உயரம் வரை வளரும் தன்மைஉடையது. இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய்நெல்லி என தமிழர் பெயரிட்டு அழைத்தனர். பேச்சு வழக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்காநெல்லி எனவும் அழைக்கின்றனர்.

தொன்றுதொட்டே தமிழர் மருத்துவத்தில், மஞ்சள்காமாலை நோய்க்கு இம்மூலிகையை பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதனை இன்றும் கிராமத்து மக்களின் வாய்ச் சொல்லிலும், பயன்படுத்துதலிலுமிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுகூடங்களில் இம்மூலிகை பல்வேறு விதங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

மஞ்சள் காமாலை, மூத்திர நோய்கள், குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, வயிற் றோட்டம், முறைசுரம், அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், பசியின்மை, தோல் நோய்கள், தீராத அழுகல் புண்கள், புரைகள், வீக்கம், குருதிவடிதல் போன்ற நோய்களுக்கான மூலிகை மருத்துவத்தில் கீழாநெல்லி பயன்படுகின்றது. 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 

 

10. மருதாணி  - Maruthani

இயற்கை நமக்கு கொடுத்த அற்புதமான கொடையில் மருதாணியும் ஒன்று. என்னற்ற பயன்கள் ஒவ்வொரு செடிக்கும் ஒரு பயன் உள்ளது அதில் மருதாணி மிக முக்கியமானது ஆகும்.

மருதாணி இலையை வெறும் அழகுக்காக பெண்கள் கைககளில்வைக்கிறார்கள் என்று கருதினால் அது மிகப்பெரிய தவறாகும்.மருதாணி இலையை கைகளில் வைப்பதால் பல்வேறு பயன்களை பெண்கள் பெறுகிறார்கள்.

தோல் நோய்
தோல் பற்றிய அரிப்பு, படை ஆகிய நோய்களுக்கு, இந்த இலையை அரிசிச் சோற்றுடன் இரவு ஊறப் போட்டக் காலை வெறும் வயிற்றில் நீராகாரமாகச் சாப்பிட வேண்டும். உப்பில்லாத பத்தியம் இருத்தல் வேண்டும். 10 - 15 நாள் சாப்பிட வேண்டும்.

புண்கள்
ஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம்.

முடிவளர
இதன் தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும்.இரும்பு வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும். நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்.

தூக்கமின்மை
தூக்கமின்மைக்குத் தூக்க மாத்திரை சாப்பிடுதல் கூடாது. அது நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கும். மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்.

கால் ஆணி
உள்ளங்காலில் ஆணி ஏற்பட்டிருந்தால் மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள் கற்பூரம் சேர்த்து அரைத்து, ஆணிஉள்ள இடத்தில் தொடர்ந்து கட்டி வர ஒரு வாரத்தில்குணமாகும்.

படைகள்
கரும்படை, வண்ணான் படை கால் இடுக்கிலும், இடுப்பிலும், கழுத்து, கை இடுக்கிலும் வரும். இதற்கு ஒரு பிடி மருதாணி இலையுடன் 5 கிராம் 501 பார் கதர் சோப்புவைத்து அரைத்துக் களிம்பு போல தடவி வந்தால் கரும்படை யாவும் சுகமடையும். 10 -15 நாள் பூச வேண்டும். வண்டு கடிக்கும் சொறி, சிரங்கிற்கும் இதனைப் பூச்சு மருந்தாகப் பயன்படுத்தலாம்.